தங்க நகைகளுக்கு இனி ஹால்மார்க் முத்திரை அவசியம்… மத்திய அரசு அதிரடி!!!

0

தங்க  நகைகள் என்றாலே அனைவரும் விரும்பும் ஒன்றே. அது மங்களகரமான ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில்  அப்படிப்பட்ட இந்த தங்க  நகைகள் சுத்தமாக இருப்பதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டு தான் இருக்கிறது. இது போன்ற முறைகேடுகளை களைய அரசு தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்கி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

ஹால்மார்க் என்றால் என்ன என்று நம்மில் பலருக்கு தெரிவதில்லை. அது எதோ உயர்தர நகைகளை குறிக்கும் சொல் என்றே நாம் நம்புகிறோம். உண்மையில் ஹால்மார்க் என்பது நகையின் சுத்தத் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு முத்திரை ஆகும். அதாவது ,ஹால்மார்க் 4 முத்திரைகளை கொண்டது. அவை, பி.ஐ.எஸ் முத்திரை, நேர்த்திதன்மை முத்திரை, அஸேயிங் மற்றும் ஹால்மார்க் மையத்தின் முத்திரை, நகை விற்பனையாளர் முத்திரை ஆகியவை ஆகும்.

நாம் வாங்கும் ஒவ்வொரு தங்க நகைகளிலும் இந்த 4 முத்திரைகளும் இருந்தால் மட்டுமே அது ஹால்மார்க் தங்க நகை ஆகும். இந்த ஹால்மார்க் முத்திரை என்பது முன்பெல்லாம் கட்டாயம் இல்லை. தற்போது மத்திய அரசு இதை கட்டாயமாக்கி அறிவிப்பை அறிவித்துள்ளது. அதன்படி, விற்கப்படும் அனைத்து தங்க நகைகளிலும் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்று  தெரிவித்து உள்ளது. மேலும் தங்க நகைகள்  இனி 14,18 மற்றும் 22 கேரட் போன்ற மூன்று கிரேடுகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

இந்த புதிய நடைமுறையானது முதல்கட்டமாக 256 மாவட்டங்களில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த புது விதி முறையானது கடந்த ஜனவரி மாதமே அமல்படுத்தப்பட வேண்டியது ஆனால் கொரோனா சூழ்நிலை காரணமாக தாமதமாக அமல் ஆகி உள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here