கொரோனா தடுப்பூசி போட்டால் பசுமாடு பரிசா ??? அரசின் அறிவிப்பால் அலைமோதும் மக்கள்!!!

0

கொரோனா தொற்று நாடு எங்கும் பரவி பல உயிர்களை பறித்து வருகிறது. மேலும் சிலர் அதன் பிடியில் அகப்பட்டு மீளா துயரில் உள்ளனர். இன்னும் சிலர் அதன் பக்கவிளைவால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் தடுப்பூசி போடுவதையே அனைத்து நாடுகளும் வலியுறுத்தும் நிலையில் தாய்லாந்து அரசு புதிய யுக்தியை கையாண்டு உள்ளது. அதாவது ,தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு ஒரு பசு மாட்டை குழுக்கல் முறையில் வழங்கியுள்ளது.

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை மனிதர்களை ஆட்டி வைத்து உள்ளது. இதற்காக பல்வேறு நாட்டின் அரசுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து மக்களை காத்து வருகின்றனர். இதற்கான தீர்வாக அனைவரும் வலியுறுத்துவது தடுப்பூசி ஒன்றே. இதனால் தடுப்பூசி போடும் பணியானது முழுவீச்சில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அதை  பற்றிய தவறான கருத்துக்கள் இன்னும் மக்கள் மத்தியில் உலா வர தான் செய்கிறது.

இந்த வதந்திகளை களைய  தாய்லாந்து ஒரு படி மேலாக போய் ஒரு புது முயற்சியை கையாண்டு உள்ளது. மேலும் அங்கு மக்கள் தொகை அதிகம் என்பதால்  அனைவரையும் காக்கும் நோக்கில் அந்த நாட்டின் அரசு இப்படி ஒரு யுக்தியை மேற்கொண்டுள்ளது.அதாவது, தாய்லாந்து நாட்டின் மக்களிடையே தடுப்பூசி செலுத்தி கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தவும், அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு குழுக்கள் முறையில் பசு மாடு இலவசமாக வழங்கி  வருகிறது.

அந்த வகையில் இந்த திட்டம் 2வது வாரமாக சியாங் மாய் மகாணம், மாசியேம் மாவட்டத்தில் தொடர்ந்து வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று நடைபெற்ற குழுக்களில் இங்கம் தொங்காம் என்ற 65 வயது நபர் தேர்வு செய்யப்பட்டு ஒரு வயதுடைய பசு மாடு ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. மேலும்  இந்த பசு மாட்டை விற்கவோ அதை கொல்லவோ கூடாது என்ற நிபந்தனைகளோடு  வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் இதுவரை 27 பசுமாடுகள் குழுக்கல் முறையில் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here