சீரியல் பிரபலம் காவியா பகீர் பதிவு – கிளைமேக்ஸ்-ல நான் இல்ல., முன்னாடியே வெளிய வந்துட்டேன்!!

0
சீரியல் பிரபலம் காவியா பகீர் பதிவு - கிளைமேக்ஸ்-ல நான் இல்ல., முன்னாடியே வெளிய வந்துட்டேன்!!

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த, நம்ம மதுரை சிஸ்டர்ஸ் சீரியலில் காவியா பாத்திரத்தில் நடித்து வந்த ஐரா அகர்வால், பகீர் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

வெளியேறிய நடிகை :

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த நம்ம மதுரை சிஸ்டர் சீரியல், இறுதி அத்தியாயத்தை எட்டியது. இதன் கிளைமாக்ஸ் நேற்று ஒளிபரப்பானது. பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென முடிக்கப்பட்டது. இந்த கிளைமாக்ஸில், தீபக் மற்றும் காவியா குறித்த காட்சிகள் காட்டப்படவில்லை.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

காவியா பாத்திரத்தில் நடித்து வந்த ஐரா அகர்வால்,இது குறித்து முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டார். அதாவது தான் எப்போதோ இந்த சீரியலில் இருந்து விலகி விட்டேன் என ரசிகை ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்தார். அதனால்தான் இவர் குறித்த காட்சிகள் கிளைமாக்ஸ் எபிசோடில் ஒளிபரப்பாகவில்லை. தொடர்ந்து, ரட்சிதா நடித்து வந்த இது சொல்ல மறந்த கதை சீரியலும் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தியன் 2 வில் இந்த விஷயம் கண்டிப்பா இருக்கும்.., கண்டிஷன் போட்ட கமல்.., அப்ப பெரிய சம்பவம் இருக்கு!!

2 சீரியல்களின் முடிவை தொடர்ந்து, கண்ட நாள் முதல் சீரியலை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலின் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சஞ்சீவ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகிவிட்டது. இது குறித்த செய்திகள், தற்போது சீரியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here