வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்., வரும் 27ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!

0
வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்., வரும் 27ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!
வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்., வரும் 27ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் விதமாக, வரும் 27ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு:

இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பை பெறுவது அனைவருக்கும் சவாலான விஷயமாக உள்ளது. இந்நிலையில் கொரோனா வருகையால் தமிழகத்தில் அதிக வேலைவாய்ப்பின்மை நிலவி வருகிறது. மேலும் இதை தடுக்கும் விதமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் இணைந்து 15,000 க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்ப, வரும் நவ.,27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த முகாமில் Textiles துறை, இன்ஜினியரிங், Manufacturing துறை, Construction துறை , IT துறை, sales துறை, ஆட்டோமொபைல்ஸ், மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 250 க்கும் அதிகமான முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிகிரி, PG டிகிரி, தொழில் கல்வி பயின்றவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதுமட்டுமல்லாமல், WORK FROM HOME வேலைவாய்ப்புகளை அளிப்பதற்கான நிறுவனங்களும் இந்த முகாமில் பங்கேற்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிகள் கவனத்திற்கு.,, விரைவு ரயிலின் பயண நேரம் குறைப்பு., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் வரும்போது passport size போட்டோ, கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் xerox மற்றும் biodata கட்டாயம் எடுத்து வர வேண்டும்.இம்முகாம் பொள்ளாச்சியில் உள்ள “மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில்” நடைபெற உள்ளன. இந்த இடம் கோயம்புத்தூர் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்த முகாமில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் ,வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் , அரசு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் ரெஜிஸ்டர் செய்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here