பயணிகள் கவனத்திற்கு.,, விரைவு ரயிலின் பயண நேரம் குறைப்பு., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

0
பயணிகள் கவனத்திற்கு.,, விரைவு ரயிலின் பயண நேரம் குறைப்பு., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
பயணிகள் கவனத்திற்கு.,, விரைவு ரயிலின் பயண நேரம் குறைப்பு., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய அனைத்து வித ரயில் சேவைகளும், பொதுமக்கள் வசதிக்காக மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அறிவிப்பு:

இந்தியாவில் சாமானிய மக்களுக்கும் உதவும் வகையில் குறைந்த கட்டணத்தில் பயணம் மேற்கொள்ள ரயில் போக்குவரத்து சேவை பயன்பாட்டில் உள்ளது. இந்த சேவை மூலம் நாள்தோறும் கல்லூரிக்கு செல்ல வேலைக்கு செல்ல என்று லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் ரயில் பயணத்தில் தான் சவுரியமாக பயணிக்க முடியும். இதனால் தான் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அரை கோடி நபர்களுக்கு மேல் அரசு வேலைக்கு காத்திருப்பு – ஷாக்  ரிப்போர்ட் வெளியீடு!!

இந்த நிலையில் செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயிலின் (16848) பயண நேரத்தைக் குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து முக்கிய அறிக்கையை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் வரும் நவம்பர் 19 முதல் செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயில் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே நண்பகல் 11.30, 12.02, 12.13, 1.20 மணிக்கு புறப்படும். இதனால் “செங்கோட்டை – மயிலாடுதுறை பயணிகள் விரைவு ரயில்” நவம்பர் 19ஆம் தேதி முதல் மாலை 5.10 மணிக்கு பதிலாக, 45 நிமிடங்கள் முன்னதாக மாலை 4.25 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடையும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here