ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட்., ரூ.2,500 முதல் 4,000 வரை சம்பளம் உயர்வு! அமைச்சர் திட்டவட்டம்!!

0
ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட்., ரூ.2,500 முதல் 4,000 வரை சம்பளம் உயர்வு! அமைச்சர் திட்டவட்டம்!!
ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட்., ரூ.2,500 முதல் 4,000 வரை சம்பளம் உயர்வு! அமைச்சர் திட்டவட்டம்!!

இந்திய ரயில்வேயில் பணிபுரியும், 80,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ரூபாய் 2500 முதல் 4000 வரை ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார்.

அமைச்சர் அறிவிப்பு:

பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவையில், ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபத்திய தீபாவளி பண்டிகையின் போது, ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில், ரயில்வே துறையில் மேற்பார்வை ஊழியர்களாக பிரிவு 7, 8 மற்றும் 9 ஆகிய நிலைகளில் பணிபுரியும் 80,000 மேற்பட்ட பணியாளர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது குறித்து பேசிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், குரூப் A ஊழியர்களுக்கு இணையாக அவர்களின் தரம் மேம்படுத்தப்படும் என்றும், அவர்களின் நலனில் அரசு தீவிர அக்கறை செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்., வரும் 27ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!

இதன் ஒரு வழியாக, ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் தோறும் ரூபாய் 2500 முதல் 4000 வரை ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here