கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விக்ரம் செய்த விஷப்பரீச்சை – அட்வைஸ் செய்த ரசிகர்கள்!!

0

கொரோனா தொற்றின் காரணமாக கோப்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து விலகிகொண்ட விக்ரம் தற்போது மீண்டும் படகுழுவினருடன் இணைந்து கொண்டார். இதனால் படக்குழுவினர் இவரை வரவேற்று கேக் வெட்டி கொண்டாடினர். இருப்பினும் ரசிகர்கள் உடனே ரிஸ்க் எடுக்கவேண்டாம் என்று விக்ரமிற்கு அட்வைஸ் செய்துள்ளனர்.

நடிகர் விக்ரம்:

தற்போது விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியான நிலையிலே மக்களிடம் இருந்து நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து ஸ்ரீநிதி ரெட்டி, மியா, இர்பான் பதான் ஆகியோர் நடித்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் விக்ரம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பில் இருந்து விலகிவிட்டார்.

தற்போது கொரோனா தொற்றில் இருந்து மீண்ட உடனேயே சிறிதும் ஓய்வெடுக்காமல் கோப்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் விக்ரம். மீண்டும் படக்குழுவினருடன் இணைந்துள்ளதால் அதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை பக்கங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது. ஆனால் பலரும் ஆபத்தை உணராமல் விக்ரம் உடனேயே படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here