விஜய் டிவிக்கு கும்பிடு போட்ட பிரபல தொகுப்பாளினி- அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த பாவனா, சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் உரையாடிய போது இனிமேல் விஜய் டிவி பக்கம் வர மாட்டேன் என்று கூறியுள்ளது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொகுப்பாளினி பாவனா:

விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளர்களாக வலம் வந்தவர்கள் டிடி மற்றும் பாவனா. இந்த நிலையில் டிடிக்கு காலில் அடிபட்டு வெகு காலமாக விஜய் டிவிக்கு வராமல் இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஆர் ஆர் ஆர் திரைப்பட படக்குழுவினரை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.ஆனால் பாவனாவை விஜய் டிவி பக்கமே பார்க்க முடியவில்லை. பாவனா விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர், ஜோடி நம்பர் 1 ஆகிய ஷோக்களை தொகுத்து வழங்கி உள்ளார். ஆனால் தற்போது முழுவதுமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியில் ஷோகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பாவனாவிடம் அவரின் ரசிகர்கள் விஜய் டிவி பக்கம் உங்களை பார்க்க முடியவில்லை என்று கேட்ட போது, விஜய் டிவி தான் மக்களுக்கு என்னை நன்கு பரிச்சியம் ஆக்கியது. ஆனால் தற்போது விஜய் டிவியில் காமெடி கலந்த நிகழ்ச்சிகளை பெரும்பாலும் எடுத்து வருகின்றனர். இது போன்ற நிகழ்ச்சிகள் எனக்கு சரிப்பட்டு வராது. எனவே இனிமேல் விஜய் டிவி பக்கம் வரவே மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார். இது இவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here