ச்ச.. விக்ரமுக்கு போய் இப்படி ஒரு நிலைமையா – வெளியீட்டுக்கு பிறகு கோப்ரா படக்குழு எடுத்த மோசமான முடிவு!

0
ச்ச.. விக்ரமுக்கு போய் இப்படி ஒரு நிலைமையா - கோப்ரா படக்குழு எடுத்த மிக மோசமான முடிவு!

நடிகர் விக்ரமின் கோப்ரா படம் பெரியளவில் பாசிடிவ் விமர்சங்களை பெறாததால் படக்குழு தற்போது ஓரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

கோப்ரா:

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் கோலோச்சி வருபவர் நடிகர் விக்ரம். இவருக்கு என்று இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவரின் நடிப்பில் மாபெரும் இதிகாச காவியமான பொன்னியின் செல்வன் படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

மேலும் நேற்று (31-08-2022) இவரின் கோப்ரா படம் வெளியாகி உள்ளது. ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், மிர்னாலினி ரவி ஆகியோர் நடித்து உள்ளனர். ஆனால் இப்படம் பெரியளவில் முதல் நாளில் பாஸிட்டிவ் கருத்துக்களை பெறவில்லை. இதற்கு முக்கிய காரணமாக படத்தின் நீளம் சொல்லப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் 3 மணி நேர கோப்ரா படத்தில் தற்போது 30 நிமிடங்கள் கட் செய்யப்ட்டுள்ளதாம். தரமான படைப்புகளை தரும் விக்ரமிற்கு இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here