இம்புட்டு காசு இருக்கு.. இதுக்கு கூடவா செலவு பண்ணமாட்டீங்க நயன் விக்கி – உங்க காட்டுல மழை தான்!

0

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தங்கள் இரண்டாம் ஹனிமூனை பணமே செலவழிக்காமல் என்ஜாய் செய்து வருகின்றனர். அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நயன் – விக்னேஷ் சிவன்:

கோலிவுட் கொண்டாடும் ஜோடிகளில் நயந்தாரா விக்னேஷ் சிவனும் ஒருவர். இவர்கள் சென்ற ஜூன் மாதம் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு இந்த ஜோடி தாய்லாந்து பறந்தனர். பின்னர் ஜவான் படத்தில் நயன்தாரா பிசியாக நடிக்க தொடங்கினார்.

தற்போது சிறிய இடைவேளை கிடைத்துள்ளதால் நயன் விக்கி ஜோடி ஸ்பெயின் பறந்துள்ளனர். ஏற்கனவே இவர்களின் திருமண செலவு முழுவதையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. கூடிய விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் இவர்களின் திருமணம் டெலிகாஸ்ட் செய்யப்பட உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இந்த இரண்டாம் ஹனிமூன் செலவையும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே நயன் விக்கி ஜோடி பைசா செலவில்லாமல் இரண்டாம் ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here