1 லட்சம் பேருக்கு வேலை.,, வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கையை வெளியிட்ட முதலமைச்சர்!!

0
1 லட்சம் பேருக்கு வேலை.,, வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கையை வெளியிட்ட முதலமைச்சர்!!
1 லட்சம் பேருக்கு வேலை.,, வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கையை வெளியிட்ட முதலமைச்சர்!!

1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பல முயற்சிகளை எடுத்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இனி இவர்களுக்கு ரூ. 3000 ஓய்வூதியம்.,அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு – அரசு அதிரடி!!

மேலும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைவருக்கும் தகுதியான வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான். இந்நிலையில் 10 ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது நேற்று சென்னை டைடல் பார்க்கில் நடந்த “நாளையை நோக்கி இன்றே தலைநிமிர்ந்த தமிழ்நாடு” மாநாட்டில் தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கையை மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்தக் கொள்கை பல தொழில்துறை நிறுவனங்களுக்கு பெரிதும் துணைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கொள்கையின் மூலம் 10 ஆண்டுகளில் வான்வெளி மற்றும் பாதுகாப்புக்கு ரூ. 75,000 கோடி முதலீடு செய்யப்பட்டு அதன் மூலம் ரூ.1 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் டான்சம் மற்றும் டாம்கோ ஆகிய நிறுவனங்களின் சிறப்பு மையங்களையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here