தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0

தென் மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வறண்ட வானிலேயே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வறண்ட வானிலையே நிலவும்:

தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் வறண்ட வானிலேயே காணப்படும்.

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அதிரடி கைது!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள சுழற்சி மாற்றம் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here