ப்ளஸ் 2 வாட்ஸ் அப் வழி தேர்வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!!

0

ப்ளஸ் 2 மாணவர்களுக்கு வாட்ஸ் அப் வழியாக நடைபெறப்போகும் அலகுத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த அலகுத் தேர்வுகள் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 17 முதல் ஜூன் 29 வரை நடத்தப்படும். பொது தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த அரசு வாட்ஸ் அப் மூலம் அலகுத்தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற..கிளிக் செய்யுங்கள்..!

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • வாட்ஸ் அப்பில் பாட ஆசிரியரும், தலைமையாசிரியர் மற்றும் மாணவர்கள் உள்ளடங்கிய தனி வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட வேண்டும்.
  • இவ்வாறு குழு உருவாக்கப்படும் போது, மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்
  • விடைத்தாளில் முதல் பக்கத்தில் மாணவர் பெயர் , பதிவு எண், பாட தலைப்பு மற்றும் தேர்வு நாள் முதலிய விவரங்கள் மாணவரால் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.

  • மாணவர்கள் மடிக்கணினிகள்  அல்லது கைப்பேசி மூலம் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
  • தேர்வின் முடிவில் விடைத்தாளில் மாணவர் கையொப்பம் மற்றும் பெற்றோர் கையொப்பம் இடம் பெற வேண்டும்.
  • பின்னர் விடைத்தாள்களை PDF கோப்பாக மாற்றி பாட ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும்

  • வாட்ஸ் அப்  வழியாக பெறப்பட்ட விடைத்தாட்களை, ஆசிரியர் வாட்ஸ் அப்  மூலம் திருத்தம் செய்து உரிய மதிப்பெண்களை வாட்ஸ் அப்பில் பதிவு செய்ய வேண்டும்.
  • பின்னர் திருத்தப்பட்ட விடைத்தாட்களை மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here