வில்லி கதாபாத்திரத்திலிருந்து ஹீரோயினாக மாறிய வெண்பா – சும்மா பின்னிட்டீங்க போங்க!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடிக்கும் வெண்பா சில நாட்களாகவே வில்லி முகத்தை விட்டுவிட்டு நாயகியாக உருவெடுத்துள்ளார். அதாங்க, தொடர்ந்து பல ரீல்ஸ்களை அசத்தி வருகிறார்.

பாரதி கண்ணம்மா வெண்பா

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடிக்கும் பரீனா சன் டிவி சீரியலில் நடித்தவர். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தொகுப்பாளராக உருவெடுத்தார். பல வருடங்களாக சன் டிவியில் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் தொகுத்து வழங்கினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பல வருடங்கள் இவர் சினிமா திரையில் இருந்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதன் பிறகு பாரதி கண்ணம்மா சீரியலில் என்ட்ரி கொடுத்தார். ஆரம்பத்தில் சின்ன ரோல் தான் என்று பார்த்தால் இவ்வளவு பெரிய வில்லியாக உருவெடுப்பார் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுதெல்லாம் ட்ரெண்டிங்கே அழகான வில்லிகள் தான்.

அதுவும் வெண்பா எப்பொழுதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். இவரை பற்றி வரும் விமர்சனங்கள் யாவும் ஒன்று தான். அதாவது பரீனாவாக அவரை அனைவர்க்கும் பிடிக்கும், ஆனால் வெண்பாவாக வெறுக்கிறோம் என்பது தான் அனைவரின் கருத்து. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இப்பொழுது ஷூட்டிங் எதுவும் இல்லாததால் வீட்டில் இருக்கும் வெண்பா தனது ஒட்டுமொத்த திறமையையும் காட்டி வருகிறார். இப்பொழுது ‘அனல் மேலே பனித்துளி’ பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here