“புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 2,000 வழங்கப்படும்” – அரசாணை வெளியீடு!!!

0

புதிய ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு விடுத்ததை அடுத்து இப்போது அதிகார பூர்வமான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண நிதி:

கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியை அறிமுகப்படுத்தினார். அந்த வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

தற்போது  ஊரடங்கு அமலுக்கு வந்ததால் பொதுமக்களின் வாழ்வாரத்தை மனதில் கொண்டு கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையான 2000 ரூபாய் மே 15ந்தேதியில் இருந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழக அரசு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது அதாவது இப்போது மக்களுக்கு வழங்கப்படும் 2000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி தற்போது புதிய ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று கூறியது.

இதனைத் தொடர்ந்து தற்போது நடைமுறைக்கு வந்துள்ள, 2,14,950 புதிய அரிசி குடும்ப அட்டைகளை பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவியை வழங்கிடும் வகையில், ரூ,42.99 கோடி செலவில் ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை முதல் தவணையாக வழங்க  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here