Saturday, May 11, 2024

சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – தமிழக அரசு அறிவிப்பு!!

Must Read

இந்தியாவின் உயர்ந்த பதவிகளாக கருதப்படும் சிவில் சர்வீஸ் தேர்விற்கு இலவச ஆன்லைன் பயிற்சி 6 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வு:

வரும் அக்டோபர் மாதம் சிவில் சர்விஸ் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த தேர்வுகள் இந்தியாவின் உயரிய பதவிகளாக கருதப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பதவிகளுக்கு நடத்தப்படும். இந்த தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் அச்சம் காரணமாக அக்டோபர் மாதம் நடக்க உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

upsc
upsc

இந்த தேர்வில் பங்கேற்க இருக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இலவச ஆன்லைன் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சி மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு இது குறித்து செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளது. முதன்மை தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக இந்த ஆன்லைன் பயிற்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி குறிப்பு வெளியீடு:

இந்த பயிற்சி குறித்து செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

  • அகில இந்திய தேர்வு பயிற்சி மையத்தில் இருந்து நேரலையாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
  • அக்டோபர் 5 ஆம் தேதி முதல் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படுகிறது. 10 ஆம் தேதி நிறைவடைகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை வகுப்புகள் நடைபெறாது.
  • இந்த பயிற்சிகள் 6 நாட்கள் நடத்தப்படும்.
  • யூடியூப் வழியாக ஆன்லைன் பயிற்சி நடைபெறும். ஆர்வமுள்ள அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
  • தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், இந்திய வரலாறு என்று பல்வேறு பாடங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகளை மிகச் சிறந்த அறிஞர்கள் தான் நடத்தப் போகின்றனர்.
  • இதில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை. முன்பதிவும் அவசியம் இல்லை.
  • வகுப்புகள் காலை 11 மணி முதல் 12.30 வரை முதல் நடக்கும். பின், பிற்பகல் 2 மணி முதல் 3.30 வரை இரண்டாம் வகுப்பு நடைபெறும்.

இவ்வாறாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்தி தேர்வில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தமிழக அரசின் இலவச UPSC ஆன்லைன் பயிற்சி YouTube லிங்க் இதோ – AICSCC_TN

- Advertisement -

3 COMMENTS

  1. Youtube link enna nu sollavey illa yen? News sa full detail la poota use agum…. ipdi poota endha youtube la class nadakum nu yapdi therium? Youtube link poodunga pls

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விருதுநகரில் தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்து., இம்முறை 3 அறைகள் தரைமட்டம்? மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!!

அண்மைக்காலமாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டு வருவதால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சிவகாசி நாராயணபுரம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -