பிரபல ஒளிப்பதிவாளர் பி.எஸ் நிவாஸ் திடீர் மரணம் – இயக்குனர் பாரதிராஜா இரங்கல்!!

0

சினிமா துறையின் பிரபல ஒளிப்பதிவாளர் பி.எஸ் நிவாஸ் இன்று காலமானார். 80களில் தமிழ் திரையுலகில் சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்தவர் நிவாஸ். அவரது இறப்பிற்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பி.எஸ் நிவாஸ் காலமானார்

சினிமாவில் ஆரம்ப கட்ட காலங்களில் (1977 – 1994) சிறந்த ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் நிவாஸ். மக்களின் இதயம் கவர்ந்த திரைப்படங்களான கிழக்கேபோகும் ரயில், பதினாறு வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் ஆகிய பாரதி ராஜாவின் படங்களுக்கும் 16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களின் ஹிந்தி ரீமேக் படங்களிலும் பணியாற்றியவர். இவர் பாரதி ராஜா நடித்த ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டி – தமிழக வீரர் சாதனை!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கேரளாவை சேர்ந்த நிவாஸ் சென்னை திரைப்படக்கல்லூரியில் கல்வி பயின்றார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இவர் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடைசியாக தமிழில் ‘செவ்வந்தி’ என்ற படத்திற்கு 1994 ம் ஆண்டு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் தற்போது கேரளாவில் உயிரிழந்துள்ளார். இவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பாரதி ராஜா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, ‘எனது 5 திரைப்படங்களுக்கும் அதன் வெற்றிக்கும் துணை நின்ற பெரிய படைப்பாளி, இந்திய திரையுலகின் சிறந்த ஒளிப்பதிவாளர், என் நண்பன் திரு.நிவாஸ் அவர்களின் மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என பாரதிராஜா பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here