பிப்ரவரி இறுதியில் ரிலீஸாகும் சித்ராவின் ‘கால்ஸ்’ திரைப்படம் – படக்குழு அறிவிப்பு!!

0

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் ‘கால்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான வெளியீடு அடுத்த வாரம் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கால்ஸ் திரைப்படம்

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சித்ரா. கடந்த ஆண்டு டிசம்பரில் தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘கால்ஸ்’.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இயக்குனர் சபரீஷ் இயக்கத்தில் த்ரில்லர் வகையைச் சேர்ந்த திரைக்கதையில் உருவாகியுள்ளது கால்ஸ். இப்படத்தில் கால் சென்டர் ஊழியராக நடிகை சித்ரா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சித்ராவுடன் நிழல்கள் ரவி, வினோதினி, சுந்தர் ராஜன், தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.

அபாரதத்திற்கு பதில் முத்தம் – போலீஸ் ஆபிசர் அதிரடி சஸ்பெண்ட்!!

கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி ‘கால்ஸ்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. மிரட்டும் வகையில் அமைந்திருந்த இந்த படத்தின் ட்ரைலர் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. மறைந்த நடிகை சித்ராவின் பெற்றோர்கள், இந்தப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

‘கால்ஸ்’ திரைப்படத்தின் வெளியீடு ஏப்ரல் மாதம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தத் திரைப்படம் அடுத்த வாரம் அதாவது பிப்ரவரி 26ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சித்ரா கடைசியாக நடித்து வெளியாகவுள்ள ‘கால்ஸ்’ திரைப்படம், சித்ராவின் ரசிகர்களுக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கக்கூடியதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here