சண்டை வேணாம் – பேச்சுவார்த்தைக்கு அழைத்த சீனா…!

0
india china discussion
india china discussion

இந்திய- சீன லடாக் எல்லை பிரச்சனை காட்டு தீ போல் இருக்கிறது.இருநாட்டு வீரர்களும் சண்டையிட்டுக் கொண்டனர் அதுமட்டுமில்லாமல் ராணுவ வீரர்கள் சிலரை வீரமரணமும் அடைந்தார்கள்.எனவே சீனா இதுகுறித்து இந்தியாவிடம் சண்டை வேணாம் பேச்சுவார்த்தைக்கு தயார் என அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.

சண்டை வேணாம் சீனா வேண்டுகோள்

india china border
india china border

இந்தியா சீனா ராணுவம் லடாக் எல்லை பகுதியில் சண்டையிட்டுக்கொண்டது எனவே இந்தியா பதிலடி குடுக்கும் வகையில் சீனா ராணுவத்தை எதிர்த்து தாக்குதல் நடத்தியது.இந்த நிலையில் இந்தியாவுடன் சண்டையிட விரும்பவில்லை என சீனா கூறியுள்ளது இந்த பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.இந்தியாவில், லடாக்கின் கல்வான் பகுதியில் கடந்த ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாம் அமைத்து இருந்தனர் பின் நேற்று முன்தினம் (ஜூன் 15) மாலை திடீரென இருநாட்டு படைவீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் இந்தியா வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.இதனால் எல்லையில் உள்ள பரபரப்பான நிலையை மாற்றியமைக்க முயன்ற சீன ராணுவத்துக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதல்களில், 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம், இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அடைந்த நிலையில் உள்ளது.இந்நிலையில், சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தூதரக ரீதியிலும், ராணுவ ரீதியிலும் சமரச முயற்சி நடைபெற்று வருகிறது. நடந்ததில் எது சரி, எது தவறு என்பதில் சீன அரசு தெளிவாக உள்ளது. இந்தியாவுடன் மேற்கொண்டு சண்டையிட விரும்பவில்லை. எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு சீனா அழைப்பு

திங்கள்கிழமை இரவு இந்திய – சீன இருநாட்டு மோதலுக்கு முன்னதாகவும் படைகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக இரு நாட்டுப் படைகளின் ராணுவ மேஜர் ஜெனரல் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.இந்திய-சீனப் படைகள் மோதல் குறித்து  இன்று காலை முப்படைத் தளபதிகளுடனான ஆலோசனைக்கு நடைபெற்றது,அமைச்சர் ராஜ்நாத் சிங் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி அதிகரிக்க உத்தரவிட்டார்.இதன்பின் லடாக் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர சீனா இந்தியாவை.பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்த நிலையில் தற்போது இந்திய- சீன உயர்மட்ட அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.இரு நாட்டுப் படைகளின் ராணுவ மேஜர் ஜெனரல் அளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இந்திய சீனா வெளியுறவு துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here