கிராமங்களில் வீடு தேடி சென்று மருத்துவம்.., முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!!

0
கிராமங்களில் வீடு தேடி சென்று மருத்துவம்.., முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!!
கிராமங்களில் வீடு தேடி சென்று மருத்துவம்.., முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!!

ஏழை எளிய மக்களும் எளிய முறையில் மருத்துவம் பெற பல்வேறு நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. இதுபோக 50 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என மாநிலங்கள் தோறும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் சமூக மருத்துவத்துறை சார்பில் புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவ கல்லூரியில் இன்று (11.01.2023) மாநில மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உட்பட சர்வதேச பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். முதல்வர் ரங்கசாமி பேசுகையில், 10 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு இந்தியாவின் சிறந்த மாநிலமாக புதுச்சேரி விளங்குகிறது என கூறியுள்ளார்.

மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு.., கல்வி நிறுவனங்களை வலியுறுத்தும் யு.ஜி.சி!!

இதையடுத்து கிராமப்புறங்களில் வீடுதோறும் சென்று மக்களை பரிசோதித்து சிறந்த மருத்துவம் வழங்க வேண்டிய ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் உலகத் தரமான மருத்துவ வசதி கொடுக்கும் மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here