செட்டிநாடு “மட்டன் கோலா உருண்டை” ரெசிபி- வீட்லயே செஞ்சு அசத்துங்க!!!

0

செட்டிநாடு சமையல்ல இருக்குற டேஸ்ட் வேற, எந்த வகை சமையலையும் இருக்காதுங்க. காரணம் நம்ம தமிழ்நாட்டின் பாரம்பரியமான சமையல் முறையை பின்பற்றி செய்யுறதுனால தான். அப்புறம் சில குழந்தைங்க மட்டன் சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிப்பாங்க. அவுங்களுக்கு இந்த மட்டன் கோலா உருண்டையை செஞ்சு குடுத்தீங்கன்னா ரொம்ப ஆசையா சாப்பிடுவாங்க. செட்டிநாட்டு முறையில நம்ம வீட்லயே மட்டன் கோலா உருண்டை செய்யுறது எப்படின்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

மட்டன் கைமா கறி – 500 gm
பச்சை மிளகாய் – 3
மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி , பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
பட்டைத்தூள் – 1 டீ ஸ்பூன்
கிராம்புத்தூள் – 1 டீ ஸ்பூன்
ஏலக்காய்தூள் – 1 டீ ஸ்பூன்
வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது அளவு
மல்லித்தழை – 1 கை அளவு
தேங்காய் – 1 கை அளவு ( துருவியது)
பொரிகடலை – 1/2 கப் (பொடி பண்ணியது)
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 டீ ஸ்பூன்

செய்முறை:

முதலில் மட்டன் கைமா கறியை மஞ்சள்தூள் சேர்த்து கழுவி கொள்ள வேண்டும். பிறகு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மட்டனை வேக வைக்க வேண்டும். பிறகு வெங்காயம், கறிவேப்பில்லை, மல்லித்தழை, தேங்காய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம், சோம்பு, பச்சை மிளகாய் இவற்றை நன்கு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த கலவையில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பொரிகடலை, இஞ்சி, பூண்டு விழுது, வேக வைத்த கறி இவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி!!

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த உருண்டைகளை பொன் நிறம் ஆகும் வரை பொரித்து எடுக்க வேண்டும். இப்பொழுது சூடான, சுவையான “செட்டிநாட்டு மட்டன் கோலா உருண்டை” தயார். இந்த ரெஸிபிய உங்க வீட்ல செஞ்சு உங்க குழந்தைகளையும், உங்க உறவினர்களையும் அசத்துங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here