கண்ணமூச்சி ஆடும் தங்கத்தின் விலை – இன்று நகை வாங்கலாமா? வேண்டாமா?

0

நேற்று அதிரடியாக குறைந்த தங்க விலை இன்று எப்போதும் போல் அதிகரித்துள்ளது. தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வரும் தங்கத்தின் விலையில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தங்கத்திற்கு போட்டி போட்டு கொண்டு வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து உயரும் தங்க விலை:

தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வது என்பது இந்திய மக்களின் வழக்கம். அப்படி முதலீடு செய்தால் காலத்தால் அழிந்து போகாது என்பதும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்பது மக்களின் அசையாத நம்பிக்கை. இந்திய குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து விட்டால் அந்த குழந்தைக்கு தங்கத்தினால் ஆன ஆபரணங்களை அணிய செய்து அழகு பார்ப்பர். இப்படி அனைவருக்கும் பிடித்தமான தங்கம், மக்களின் தேவையை பொறுத்து விலை நிலவரம் நிர்ணயிக்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் விலை நிலவரத்தில் மாற்றம் ஏற்படும். கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பின் எதிரொலியாக தங்க விலை அதிகரித்து வந்தது. இதனால் நடுத்தர மக்கள் அதிக கவலை அடைந்தனர். இந்த மாதத்தின் துவக்கத்தில் தங்க விலை நிலவரம் ஏற்ற இறக்கங்களோடு தான் இருந்து வந்தது. நேற்று காலை மற்றும் மாலை அதிரடியாக குறைந்த தங்க விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

இன்றைய விலை நிலவரம்:

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் (22 கேரட்) சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து ரூ.37,112 என்று விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 17 ரூபாய் அதிகரித்து ரூ.4,639 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கம் (24 கேரட்) ஒரு கிராம் 17 ரூபாய் உயர்ந்து ரூ.5,019 என்று விற்கப்படுகிறது.

கொரோனா கிருமிநாசினி தான் காரணமா?? ஆந்திராவில் பரவும் மர்ம நோய்!!

ஒரு சவரன் ரூ.40,152 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்க விலை தான் உயர்கிறது என்று பார்த்தால் வெள்ளியின் விலையும் உயர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. ஒரு கிராம் ரூ.67.20 என்ற நிலவரத்தில் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 67,200 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here