தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது – சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி!!

0
j radhakrishnan
j radhakrishnan

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது எனவே அதனால் மக்கள் மத்தியில் ஒரு சில அச்சமும், பதற்ற நிலையும் இருந்து வருகிறது.தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இன்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

சென்னையில் படிப்படியாக குறையும் கொரோனா 

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இருந்தாலும் கடந்த மாதத்தை ஒப்பிட்டு பார்க்கையில் முழு ஊரடங்குக்கு பின் கொரோனா தொற்று பரவல் சற்று கணிசமாக குறைந்து வருகிறது.

j radhakrishnan

கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்பதற்காக மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், அத்தியாவசிய பணிகளின்றி வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டவைகளை பின்பற்றினாலே கொரோனா தொற்றை பெருமளவில் தடுக்க முடியும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.முன்னதாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் மற்றும் முறைகளை கேட்டறிந்த அவர், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் பற்றியும் ஆய்வு நடத்தினார். இனி வரும் காலங்களில் தமிழகத்தின் மற்ற ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வுக்கு செல்வார் எனக் கூறப்படுகிறது.

j radhakrishnan
j

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78,573 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை 60,694 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போதைய நிலையில், 16,601 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இன்று மட்டும் 24 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,277 ஆக உயர்ந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here