ஜம்மு-காஷ்மீரில் வருகிறது ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் – ரூ. 80,000 கோடி ஒதுக்கீடு

0
Jammu and Kashmir

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு ரூ. 80,000 கோடியை ஒதுக்கியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அது இரண்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதனால் அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதுமட்டுமில்லாமல் ஜம்மு – காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

தற்போது அங்கு ஆறுமாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அங்கு இணைய சேவை, மொபைல் போன் சேவை போன்றவை வழங்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு அங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காகவும் மேலும் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மருத்துவமனை, மின்சார உற்பத்தி மற்றும் நீர்பாசனத் திட்டம் போன்றவற்றை ஏற்படுத்துவதற்காகவும் 80 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here