இந்த சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! அரசு தரப்பு மகிழ்ச்சி!!

0
இந்த சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! அரசு தரப்பு மகிழ்ச்சி!!
இந்த சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! அரசு தரப்பு மகிழ்ச்சி!!

மத்திய அரசு 2019ல் கொண்டு வந்த, குறிப்பிட்ட சாதி பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு குறித்த பரபரப்பு வழக்கில், உச்சநீதிமன்றம் இந்த இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

இன்று தீர்ப்பு:

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குறிப்பிட்ட சாதியினருக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி வருகிறது. அதுவும் குறிப்பாக தமிழகம் உட்பட சில மாநிலங்களில், இந்த இட ஒதுக்கீடு முறை அதிக அளவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு உயர் சாதி ஏழைகளுக்கு (EWS) கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அரசின் இந்த சட்டம், சாமானிய மக்களின் இட ஒதுக்கீட்டை கேள்விக்குறியாக்கும் ஒன்று எனக் கூறி ஒரு சில கட்சிகள் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மத்திய அரசின் இந்த இட ஒதுக்கீடு, அரசியல் சட்டப்பிரிவு 14 க்கு எதிரானது எனக்கூறி எதிர் தரப்பு கடுமையாக வாதிட்டது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 7 நாட்கள், 5 நீதிபதி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

TNPSC உதவியாளர் பணி நியமனம் 2022.,, வலுக்கும் கோரிக்கை!!

இந்த நிலையில், விரைவில் ஓய்வு பெற இருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு. யு.லலித் தலைமையிலான அமர்வு, இந்த இட ஒதுக்கீடு வழக்கில் அரசின் முடிவு தொடரும் என்றும், இந்த இட ஒதுக்கீடு செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கி உள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here