சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – உச்சநீதிமன்றத்தில் பெற்றோர்கள் வழக்கு..!

0
12th cbse
12th cbse

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கில் இருக்கின்றது.அதுமட்டுமில்லாமல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள்  ஒத்தி வைக்கப்பட்டன ஆனால் இப்பொழுது கொரோனா பயத்தினால் தேர்வுகளை ரத்து செய்யுமாறு பெற்றோர்கள் வழக்கு தொடர்கின்றனர்.

சி பி எஸ் இ 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யக்கோரி பெற்றோர்கள் வழக்கு

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் இந்தியாவில் கட்டுப்படுத்தப்படாததால் இன்னும் குறையாமல் அதிகரித்துதான் வருகிறது.இந்நிலையில் லட்சக்கணக்கான மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மீதமுள்ள 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ கடந்த மாதம் 18ம் தேதி வெளியிட்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை தேர்வு நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகள் பாதியில் ஒத்திவைக்கப்பட்டன.

cbse
cbse

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்நிலையில் வருகிற ஜூலை 1ம் தேதி முதல் மீதமுள்ள தேர்வுகள்  1500 மையங்களில் நடத்தப்போவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது என கடந்த மாதம் 18ம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பெற்றோர்கள் நேற்று வழக்கு தொடர்ந்தனர்.பெற்றோர்கள் சார்பில் மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா, டெல்லி பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி போன்ற மதிப்புமிக்க நிறுவனங்கள் எந்தவொரு தேர்வும் நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். பல மாநில வாரியங்களும் தேர்வை நடத்தும் முடிவை ரத்து செய்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், சி.பி.எஸ்.இ. தேர்வுகளை நடத்த எந்த அடிப்படையும் இல்லை என்றார். இந்த மனுவில் கூறியிருப்பதாவது: மாணவர்களுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையிலும், பாடங்களின் உள்மதிப்பீட்டு மதிப்பெண்களின் சராசரி அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here