சாதி பெயரை வாகனத்தில் பதித்தால் தண்டனை – போக்குவரத்து துறை அதிரடி!!

0

இனி ஓட்டுனர்கள் தங்களது வாகனத்தில் சாதி பெயர் எதுவும் பதித்திருந்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்று உத்திரபிரதேச மாநில போக்குவரத்துக்கு துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உத்திர பிரதேசம்:

தற்போது ஓட்டுனர்கள் தங்களது வாகனத்தில் சாதியின் பெயரை பதிப்பது அதிகமாகி கொண்டே வருகிறது. ஸ்கூட்டர் அல்லது தங்களது 4 சக்கர வாகனத்தில் இருக்கும் கண்ணாடிகள் அல்லது நம்பர் பலகையில் தங்களது சாதியின் பெயரை பதிக்கின்றன. மேலும் இந்த சம்பவங்ககள் உத்திரபிரதேச மாநிலத்தில் அதிகமாக நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது. உத்திரபிரதேச மாநிலத்தில் யாதவ், ஜாட், குர்ஜார், பண்டிட் போன்ற சாதியின் பெயர்களை தான் அதிகமாக தங்களது வாகனத்தில் பதிக்கின்றன. மேலும் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதற்கேற்றவாறும் சாதி பெயர்கள் பதிக்க பட்டு வருகிறது .

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சான்றாக பகுஜன் சமாஜ் ஆட்சியின் போது ‘ஜாதவ்’ என்ற சாதி பெயரும், சமாஜ்வாடி ஆட்சியின் போது ‘யாதவ்’ என்ற சாதி பெயரும் மற்றும் யோகி ஆதித்யநாத் ஆட்சியில், சத்திரியா, தாக்கூர் அல்லது ராஜ்புத் என்ற சாதி பெயரும் வாகனத்தில் அதிகமாக இடம் பெற்றிருந்தது என்று கூறப்படுகிறது. தற்போது இதனை தடுக்கும் வகையில் உத்திரபிரதேச மாநில போக்குவரத்துக்கு துறை புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

‘ஹேமாவை எப்படியாவது கண்ணம்மாவிடம் ஒப்படைக்க வேண்டும்’ – துளசியிடம் கதறும் சௌந்தர்யா!!

மேலும் இது குறித்து ஹர்ஷல் பிரபு என்ற ஆசிரியர் ஒருவர் பதிவு துறைக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக்கடிதம் இந்தியா பிரதமர் அலுவலகம் வரை சென்றுள்ளது. அதில் அவர் கூறியதாவது ” இது போன்ற நடவடிக்கைகள் இனி நடைபெறாமல் இருக்க உத்திரபிரதேச மாநில போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கூடுதல் போக்குவரத்து ஆணையர் முகேஷ் சந்திரா அனைத்து வட்டார அலுவலகங்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது “இனி சாதி பெயர் இடம் பெற்றிருக்கும் அனைத்து வாகனங்களையும் உடனடியாக பறிமுதல் செய்ய உத்தரவிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here