பாக்ஸிங் டே டெஸ்ட் – 6 விக்கெட்களை இழந்து தவிக்கும் ஆஸ்திரேலிய அணி !!

0

தற்போது இந்தியாவிற்கு எதிராக மெல்போர்னில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

பாக்ஸிங் டே டெஸ்ட் :

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் துவக்கத்தில் இருந்தே இந்திய அணி தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்களில் தனது ஆட்டத்தை இழந்தது. அதன் பின் தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி 326 ரன்களை குவித்தது. இந்தியா அணி தரப்பில் கேப்டன் ரஹானே அதிகபட்சமாக 112 ரன்களை குவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பின் ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்ஸை துவங்கி விளையாடி வருகிறது. 2வது இன்னிங்ஸ் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பௌலிங்கை எதிர்கொள்ள முடியாமல் திணறி ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேகள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். அதிகம் எதிர்பார்த்த ஸ்மித் 8 ரன்களில் பும்ராஹ் வேகத்தில் வீழ்ந்தார். ஸ்மித் இந்த டெஸ்ட் தொடரில் தனது பார்மை இழந்தது போல் தெரிகிறது.

மீண்டும் உச்சத்தை தொடும் தங்கத்தில் விலை – அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

மேலும் ஜோ பர்ன்ஸ் 4, மரன்ஸ் 28, ஹெட் 17 மற்றும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் 1 ரன்களில் தங்களது ஆட்டத்தை இழந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக துவக்க ஆட்டக்காரர் மாத்திவ் வேட் 40 ரன்களை குவித்துள்ளார். தற்போது 3ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் எடுத்து 6 விக்கெட்களை இழந்துள்ளது. க்ரீன் 17 ரன்கள் மற்றும் கம்மின்ஸ் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 2, பும்ராஹ், அஸ்வின், சிராஜ், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். மேலும் ஆஸ்திரேலிய அணி 2 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here