IPL-லில் அதிக கோடிக்கு வாங்கப்பட்ட வீரருக்கு கட்டுப்பாடு விதித்த வாரியம்…, மும்பை அணிக்கு வந்த சோதனை!!

0
IPL-லில் அதிக கோடிக்கு வாங்கப்பட்ட வீரருக்கு கட்டுப்பாடு விதித்த வாரியம்..., மும்பை அணிக்கு வந்த சோதனை!!
IPL-லில் அதிக கோடிக்கு வாங்கப்பட்ட வீரருக்கு கட்டுப்பாடு விதித்த வாரியம்..., மும்பை அணிக்கு வந்த சோதனை!!

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பை தொடருக்காக பிசிசிஐயானது, 20 பேர் கொண்ட இந்திய வீரர்களை தேர்வு செய்து வைத்திருப்பதாக கூறியிருந்தது. இந்த 20 வீரர்களின் பணி சுமையை குறைக்க, பிசிசிஐயானது இவர்களை ஐபிஎல் தொடர்களில் அதிகம் பங்கு பெற வைக்காமல் இருக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்தியாவை போல, ஆஸ்திரேலிய அணியும் முக்கிய வீரர்கள் ஐபிஎலில் விளையாட்டுவதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளுக்கு ஏற்று தான், ஆஸ்திரேலிய வீரர்கள், ஐபிஎல் ஏலத்தில் பங்கு பெற்றார். இதில் பங்கு பெற்று வீரர்களில், கேமரூன் கிரீன் ரூ. 17.5 கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார்.

விராட் கோலி, ரோஹித்தை நம்பாதீர்கள்…, கபில் தேவ் ஓபன் டாக்!!

இவருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தனிப்பட்ட வகையில் கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி மோத உள்ளது. இந்த போட்டிகள் அனைத்திலும் கேமரூன் கிரீன் விளையாடினால், அடுத்த சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால், மும்பை அணிக்காக கேமரூன் கிரீன் சில போட்டிகளில் மட்டுமே விளையாட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here