ரஜினி, விஜய் மற்றும் சூர்யாவுடன் பணி புரிந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் பிருந்தா மாஸ்டர்..!

0

நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் கடந்த சில நாட்களாக ரஜினி, விஜய் மற்றும் சூர்யாவுடன் பணி புரிந்த அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.

நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர்..!

தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருபவர் பிருந்தா மாஸ்டர். ஹே சினாமிகா படம் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ள அவர் கடந்த சில நாட்களாக ரஜினி, விஜய் மற்றும் சூர்யாவுடன் பணி புரிந்த அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.

விஜய்யுடன் நான் பல படங்களில் பணியாற்றியுள்ளேன். அவரது நடனத்தை பற்றி சொல்லவே தேவை இல்லை அது உங்களுக்கே தெரியும். அவர் எப்போதும் மிகக் குறைவாகத் தான் பேசுவார் ஆனால் அவரது படங்கள் பேசும். அதிகம் திறமையான மற்றும் பணிவான ஒரு நபர் என விஜய் பற்றி பிருந்தா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

வாரிசு தயாரிப்பாளர் என்னை படுக்கையறைக்கு அழைத்தார் – அதிதி ராவ் Open Talk..!

சூர்யா பற்றி வெளியிட்டுள்ள பதிவில் சூர்யா உடன் பல படங்களில் பணியாற்றியது எனக்கு ஒரு சிறப்பான அனுபவம். கஜினி, காக்க காக்க, ஆயுத எழுத்து, தானா சேர்ந்த கூட்டம் இப்படி பல படங்களில் அவருடன் பணியாற்றியுள்ளேன். மிகவும் பணிவான மற்றும் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று நன்கு அறிந்த ஒரு நபர் சூர்யா. அவர் ஒரு ஜென்டில்மேன். நன்றி சூர்யா என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரஜினியுடன் காலா படத்தில் பணியாற்றிய பிருந்தா மாஸ்டர் ரஜினி கடவுள். மிக்க நன்றி சார் நீங்கள் ஒரு சிறந்த மனிதர் எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here