பார்டர்-கவாஸ்கர் டிராபி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கும் ஜடேஜா…, அணி விவரம் உள்ளே!!

0
பார்டர்-கவாஸ்கர் டிராபி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கும் ஜடேஜா..., அணி விவரம் உள்ளே!!
பார்டர்-கவாஸ்கர் டிராபி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கும் ஜடேஜா..., அணி விவரம் உள்ளே!!

இந்திய அணி இந்த வருட தொடக்கம் முதல் 50 ஓவர் உலக கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய இரண்டு தொடருக்கும் தயாராகும் வகையில், பக்காவான ஷெடுயூலே தயார் செய்து வைத்துள்ளது. இதன்படி, முதலில் இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி விளையாடி கைப்பற்றியது. இதனை தொடர்ந்து, நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரை, வரும் ஜனவரி 18ம் தேதி முதல், பிப்ரவரி 1ம் தேதி வரை விளையாட உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி, வரலாற்று சிறப்புமிக்க பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரை விளையாட இருக்கிறது. இந்த டிராபியானது, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராகும். இதன் முறையை, பிப்ரவரி 9ம் தேதி முதல் மார்ச் மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை ஏற்கனவே அறிவித்த நிலையில், பிசிசிஐயானது இந்திய அணியை அறிவித்துள்ளது. இதில், ஜடேஜா உடற் தகுதி பொறுத்து களமிறங்குவார் என குறிப்பிட்டுள்ளது. மேலும், டெஸ்டின் அறிமுக வீரர்களாக சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தியாவின் ஒருநாள் மற்றும் T20 அணி அறிவிப்பு!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), சுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத், இஷான் கிஷன், அஸ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here