IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தியாவின் ஒருநாள் மற்றும் T20 அணி அறிவிப்பு!!

0
IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தியாவின் ஒருநாள் மற்றும் T20 அணி அறிவிப்பு!!
IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தியாவின் ஒருநாள் மற்றும் T20 அணி அறிவிப்பு!!

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக நாளை 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியை விளையாட இருக்கிறது. ஏற்கனவே, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், நாளை நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய அணி ஒயிட்வாஷ் செய்யுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த தொடரை தொடர்ந்து, இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதில், ஜனவரி 18, 21 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஒருநாள் தொடரும், ஜனவரி 27, 29 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் டி20 தொடரையும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி பிசிசிஐயானது தற்போது அறிவித்துள்ளது. இதில், கே எல் ராகுல் மற்றும் அக்சர் படேல் தனிப்பட்ட காரணங்களால் இந்த இரு தொடர்களில் பங்குபெற வில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி வெற்றியுடன் சாதனையை தொடங்கிய இந்தியா!!

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், இஷான் கிஷான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், KS பாரத், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது , ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி, பிரித்வி ஷா, முகேஷ் குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here