ஒரே ஒரு போன் காலால் விஜயகாந்த் வீட்டிற்கு பதறியடித்து வந்த போலீஸ்…! என்னவா இருக்கும்!!!

0

கேப்டன் என்று அனைவராலும் புகழப்படும் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக ஒரு போன் கால் காவல் துறையினருக்கு வந்தது. இதையடுத்து அவரின் வீட்டுக்கு காவல் துறையினர் சென்றனர். அது புரளி என தெரிந்ததும் அந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள   விஜயகாந்த் வீட்டுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக நடிகர்கள் அஜித், ரஜினிகாந்த், விஜய் என பல சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து உள்ளன. பிரபலங்களுக்கும் மற்றும் நடிகர் நடிகைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாகவே உள்ளன.

 

அதனை காவல் துறையினர் விசாரிக்கும்போது புரளி என தெரியவரும். இந்நிலையில்,சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்தது.  இந்த தகவலை தெரிவித்த மர்ம நபர், வேறு எந்த விவரங்களையும் சொல்லாமல் போன் இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு காவல்துறையினர் மோப்ப நாய், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் போன்றோர்  தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் கிடைக்காததால் , காவல்துறைக்கு கிடைத்த தகவல் பொய்யானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு போன் செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் முதல்வர் வீட்டுக்கும் அதே போன்று பிரபல நடிகர்களுக்கும் மிரட்டல் வந்துள்ளது.இதன் பின்னணியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஷ்வர் என்ற இளைஞர் இருப்பதும் , அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும்  கூறப்படுகிறது. அவரை போலீசார் கைது செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் அதே வாலிபரா? அல்லது வேறு யாரேனும் இதன் பின்னணியில் இருக்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here