3 வயதிலேயே கலாச்சாரதை கற்கும் அசினின் மகள்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

0

தமிழ் திரை உலகம் பல மொழி நடிகைகளுக்கு ஒரு தூண்டு கோலாக உள்ளது. அந்த வகையில் அசின் ஒருவராவார். இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர். இவர் தமிழில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அறிமுகமானவர். இவருக்கு  பட வாய்ப்புகள் இல்லாததால் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் நுழைந்து விட்டார். அவருக்கு ஆரின் என்ற 3 வயது பெண் குழந்தையும் உள்ளது. சமீபத்தில்  அரின், கதக் கற்று வரும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

நடிகை அசின் அறிமுகமாகிய எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி  படத்தில் ஒரு மலையாள பெண்ணாகவே நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். அதை தொடர்ந்து அவர், உள்ளம் கேட்குமே , கஜினி,  சிவகாசி, போக்கிரி, காவலன், தசாவதாரம் என ஷாம் ,சூர்யா,விஜய்,அஜித்,கமல் என பல  முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்தார். சொல்ல போனால் அந்த காலகட்டத்தில் இளசுகளின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.

இதையடுத்து தமிழ் சூர்யா-அசின் நடிப்பில் வெளியான கஜினி இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியானது. இந்த படம் அங்கும் மாபெரும் வெற்றியை தேடி தந்தது. அதன் பின் இந்தி திரையுலகில் கவனம் செலுத்திய அசினுக்கு அவர் நினைத்த அளவு கைகொடுக்கவில்லை. தோல்விகளே ஏற்பட்டது. மேலும் தமிழில்  நுழைய  முயன்றார் அங்கும் அவருக்கு மார்க்கெட் குறைந்தது. பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் போகவே, கடந்த 2016-ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரின் என்ற 3 வயது பெண்  குழந்தையும்  உள்ளது. அசின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  தனது மகளின் மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடினார்.

தற்போது 3 வயதாகும் அசினின் மகள் அரின் கதக்  கற்று வருவது போன்ற  புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அசின். மேலும்  அந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது வைரல் ஆகிவருகிறது. அசின் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். அதே போல கதகளி கேரளாவின் பாரம்பரிய கலை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே தனது இரத்தத்தில் உள்ள கலையை மகளுக்கு கற்று கொடுத்து வருகிறார் அசின்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here