சினிமா வாய்ப்பு கேட்ட கனா காணும் காலங்கள் பாண்டி- மறுத்த சிவகார்த்திகேயன்!!

0

நடிகர் பிளாக் பாண்டி தனது நண்பரான சிவகார்த்திகேயனிடம் சென்று சினிமா வாய்ப்பு கேட்டு உள்ளதாகவும், அதை சிவகார்த்திகேயன் மறுத்து விட்டதாகவும்  தற்போது பாண்டி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சிவகார்த்திகேயன்:

பொதுவாக இன்றைய இளைஞர்களுக்கு சீரியல் என்றாலே பிடிக்காது. ஆனால் அவர்களையும் சீரியல் ஒன்று கவர்ந்து இழுத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் தான் அது. அதில் காமெடியனாக பிளாக் பாண்டி நடித்து இருப்பார்.பின்னர் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார். பின்னர் அங்காடி தெரு படம் இவருக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை தந்தது.

மேலும் இவரும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனும் நல்ல நண்பர்கள் ஆக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் பிளாக் பாண்டி சினிமா வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டமாக இருந்த நேரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மேலாளரிடம் பாண்டிக்கு பணம் வழங்க கூறியுள்ளார். ஆனால் பாண்டி எனக்கு பணம் வேண்டாம் சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தாருங்கள் என்று கேட்டு உள்ளார். ஆனால் சிவகார்த்திகேயனிடம் இருந்து ஒரு பதிலும் வரவில்லை எனவே தன் நண்பர்கள் யாரும் உதவவில்லை என்பதை சோகத்துடன் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here