கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும் !!!

0

கொரோனா தாக்கத்தை தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை நோய் தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. கோவிட் -19 லிருந்து மீண்டவர்களுக்கு அதிகளவில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறிய நிலையில் கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறி மற்றும் தடுப்பு நவடிக்கைகளும் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது .

கருப்பு பூஞ்சை நோய்:

அறிகுறிகள் :

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிறகும் மூக்கடைப்பு மற்றும் காய்ச்சல் காணப்படும். முகம் வீங்கி முகத்தில் அதிகமான வலி காணப்படும். பார்வை குறைபாடு ஏற்படுவதோடு பார்வை தெளிவாக இல்லாமல் அனைத்தும் இரட்டையாக தெரிவதும் இதற்கான அறிகுறிகள் தான். மேலும் மூக்கில் ரத்தம் கலந்த நீர் வருவது கருப்பு பூஞ்சை நோய்க்க்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை :

நோய் வராமல் பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. அதில் ஆரோக்யமான உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரை அளவை சரியாக வைத்திருப்பதும் உடற்பயிற்சி செய்வதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருதப்படுகிறது.

 

கொரோனா பாதித்தவர்கள் செய்யவேண்டியது :

கொரோனா பாதித்தவர்கள் சத்தான உணவு உட்கொண்டு, வெளியில் செல்வதை தவிர்த்து வருவதால் கருப்பு பூஞ்சை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளலாம். தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியில் செல்ல நேரிட்டால் இரண்டு முகக்கவசம் அணிவது அவசியம் ஆகும் .

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கருப்பு பூஞ்சை நோயின் விளைவு:

இந்த வைரஸ் மூக்கில் உள்ள சைனஸை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் கண் மற்றும் மூளையை பாதிக்கிறது.மேலும் இது வேகமாக பரவக்கூடிய வைரஸ் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here