சீன பணக்காரரை முந்திய கவுதம் அதானி..!!! சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா??

0

இந்தியாவே கொரோனா இரண்டாம் அலையால் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கும் இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த கவுதம் அதானி ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் கவுதம் அதானி. இவர் ரியல் எஸ்டேட் அதிபர், கட்டுமானத்துறையின் ஜாம்பவான் என்று புகழப்படுபவர். கொரோனா ஊரடங்கு காலத்திலும் தன் வர்த்தகத்தை இவர் பன்மடங்கு விரிவாக்கம் செய்துள்ளார். இவரது பங்குகள், விமான நிலையங்கள், சூரிய மின்சக்தி, துறைமுக வர்த்தகம் என பல துறைகளிலும் மிகவேகமாக அதிகரித்து வருகிறது.

சென்ற வருடத்தில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 5 மடங்கு உயர்ந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டில் அதானி டோட்டல் கேஸ் பங்கு 1145 சதவீதமும், அதானி எண்டர் பிரைசிஸ் பங்கு 827 சதவீதமும், அதானி டிரான்ஸ்மிஷன் 617 சதவீதமும் உயர்ந்துள்ளது. அத்துடன் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 433 சதவீதமும், அதானி பவர் நிறுவனம் 189 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளது.

இதனால் தற்போது கவுதம் அதானி, சீனா பணக்காரரான ஸோங் ஷான்ஷானை பின்னுக்கு தள்ளி ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற பெயரை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here