போற போக்க பார்த்தா கொரோனாவ மிஞ்சிரும் போல.. தமிழகத்தில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு..

0

கொரோனாவுக்கு சரி சமமாக கருப்பு பூஞ்சை தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ஜூலை 2 ஆம் தேதி நிலவரப்படி இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் 3438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவையில் தொற்று முற்றியதால் 30 பேருக்கு கண்பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகளை தாக்கும் பேராபத்தாக இந்த கருப்பு பூஞ்சை தொற்று மாறியுள்ளது. பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த பூஞ்சை அதிகம் தாக்குவதாக கூறப்படுகிறது. கொரோனா, கருப்பு பூஞ்சை நோய் பரவலை தொடர்ந்து, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை நோய் பரவி வருவதாக மருத்துவத்துறையினர் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

தற்போது ஜூலை 2 ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் 3438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு பட்டியலில் 1032 தொற்று எண்ணிக்கையுடன் சென்னை முதலிடத்தில் உள்ளது. மதுரையில் 519 பேரும், சேலத்தில் 353 பேரும், கோவையில் 256 பேரும் இந்த தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாக கோவையில் இந்த தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் 30 பேருக்கு தொற்று முற்றியதால் கண் பார்வை பறிபோயுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here