உலகையே ஒரே குடும்பமாக்கியது இந்திய நாகரிகம் – பிரதமர் மோடி பெருமிதம்!!

0

இந்திய நாகரிகம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுகிறது என்று இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெருமிதமாக தெரிவித்துள்ளார். தற்போது இதுதொடர்பாக முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

நாட்டின் பிரதமர்:

உலகம் முழுவதும் கொரோனா என்னும் உயிர் கொல்லி நோய் சுமார் ஒன்றரை வருட காலமாக மிக கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் உலக மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதனால் உலக நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் போன்ற பல பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தொற்றில் இருந்து மக்களை காக்கும் வகையில் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டும் வருகிறது.

18 கோடியை தாண்டியது கொரோனாவின் பாதிப்பு - உலகமே அச்சத்தில் உள்ளது!!!

மேலும் கொரோனா தொற்று நடவடிக்கையில் உலக நாடுகளுக்கு இந்திய முன்னுதாரணமாக திகழ்வதாக நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, இந்திய நாகரிகம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுகிறது என்று தெரிவித்தார்.

மதுரையில் குழந்தைகளை விற்பனை செய்த கொடூரம் – நிர்வாகி, காப்பாளரை அதிரடியாக கைது செய்த போலீசார்!!

இத்தத்துவத்தின் அடிப்படை உண்மையை கொரோனா தொற்று பலருக்கு உணர்த்தியுள்ளதாகவும், கடந்த 100 ஆண்டுகளில் இதுபோன்ற பேரழிவு ஏற்படவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கான கோவின் தொழில்நுட்பத்தை பிற நாடுகளுக்கு வழங்க அரசு தயார். தடுப்பூசி வழங்குவதை திட்டம் போடும் போது நாட்டில் டிஜிட்டல் அணுகுமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here