சூர்யா ஜோதிகாக்கே டஃப் கொடுக்கும் அட்லீ பிரியா…!இளம் ஜோடியின் ரிசென்ட் கிளிக்!!

0
இயக்குனர் அட்லீ, பிரியா தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.., ரசிகர்கள் வாழ்த்து மழை!!
இயக்குனர் அட்லீ, பிரியா தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.., ரசிகர்கள் வாழ்த்து மழை!!

பல வெற்றி படங்களை எடுத்து புகழ் அடைந்தவர் இயக்குனர் அட்லீ அவர்கள். இந்நிலையில்  இயக்குனர் அட்லீ தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தில் அட்லீ மற்றும் பிரியா ஜோடி, நடிகர் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் லேட்டஸ்ட் ஸ்டைலில் உள்ளனர். இந்த புகைப்படம் அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்களின் நண்பன், எந்திரன் படங்களில் உதவி இயக்குனராக இருந்து பின்னர் ராஜா ராணி என்ற காதல் படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் அட்லீ அவர்கள். அதை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்களை வைத்து தேறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரின் படங்கள் பல விருதுகள் மற்றும் வசூல் சாதனைகள் படைத்தவை ஆகும். இந்நிலையில் இவர் விஜய் டிவியின் காண காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமான நடிகை பிரியா அவர்களை காதலித்து 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ஒரு இளம் ஜோடியாக வலம் வருகின்றனர் அட்லீ மற்றும் பிரியா தம்பத்தினர். அவ்வப்போது அவர்கள் தங்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவரின் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். அந்த வகையில் அட்லீ அவர்கள் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஸ்டைலிஷ் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதில் அட்லீ மற்றும் பிரியா இருவரும் வெள்ளை மற்றும் கருப்பு நிறம் கலந்த உடையில் மிக ஸ்டைலாக போஸ் கொடுத்து உள்ளனர். இந்த போட்டோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here