மாநிலங்களுக்கு கூடுதலாக 23,680 ஆம்போடெரிசின் குப்பிகள்  ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் சதானந்தகவுடா!!!

0

கருப்பு பூஞ்சை தொற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தும் ஆம்போடெரிசின்-பி மருந்து கூடுதலாக 23,680 குப்பிகளை இன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கியுள்ளதாக மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் கருப்பு பூஞ்சை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வேகமாக இந்த நோய்  பரவுவதாலும், இதனால் பலர் அடுத்தடுத்து பாதிக்கப்படுவதாலும், பலியாவதாலும் தற்போது தமிழக அரசு  கருப்பு பூஞ்சை பாதிப்பை தொற்று நோயாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் தகவலின் படி இதுவரை தற்போது 8,848 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

தற்போது இந்த பூஞ்சை பாதிப்பிற்கு ஆம்போடெரிசின்-பி என்ற மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. உத்தர பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தெலுங்கானா, குஜராத், மத்திய பிரதேசம் போன்ற பகுதிகளில் இந்த ஆம்போடெரிசின்-பி மருந்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் இந்த மருந்தின் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ள உள்ள 8,848 நோயாளிகள் உள்ள மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கூடுதலாக 23,680 ஆம்போடெரிசின்-பி குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here