எல்லாத்துக்கும் ஒரு எல்லையுண்டு – பொதுமக்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை குஸ்பு!!

0

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க வந்த நடிகை குஷ்பு வர தாமதமானதால் பொதுமக்கள் பொறுமையிழந்து பொருளை வாங்காமல் கிளம்பினர்.

பொறுமை இழந்த மக்கள்:

கடந்த சில தினங்களாக சென்னையில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தலைநகரமும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை தேசிய பேரிடர் பாதுகாப்பு மீட்புக் குழுவினர் மிகுந்த பாதுகாப்புடன் மீட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக சார்பில், நடிகை குஷ்பூ டுமீல் குப்பம் பகுதியினருக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளதாக கூறி, அந்தக் கட்சியினர் டோக்கன்களை விநியோகம் செய்தனர்.

 

ஆனால் நடிகை குஷ்பு அந்த இடத்திற்கு வருவதற்கு  பல மணி நேரம் தாமதம் ஆனது. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கழித்து, குஷ்பு வந்ததால் பொதுமக்கள் பலர் அந்தப் பொருட்களை வாங்காமல் அவ்விடத்தை விட்டு சென்று விட்டனர். இன்னும் ஒரு சிலர் அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here