நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகை – சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற தமிழ் சினிமா!!

0

நடிகர் விஜய்யுடன் குருவி படத்தில் நடித்த மாளவிகா 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ரீஎன்ட்ரி கொடுத்த மாளவிகா:

தமிழ் சினிமாவில் திருட்டுப்பயலே என்ற படத்தின் வாயிலாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் நடிகை மாளவிகா. இதையடுத்து, “வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்” என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களுக்கு ஆட்டம் காண்பித்தார். இவர் கடைசியாக நடிகர் விஜய்யின் குருவி படத்தில்  சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து 12 ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் முழுக்கு போட்டிருந்தார். சமீபத்தில், சமூக வலைதளப் பக்கத்தில் தனது போட்டோவை வெளியிட்டு படத்திற்கு தயாரான சம்பவத்தை அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது, நடிகர் ஜீவாவுடன் இணைந்து கோல்மால் என்ற படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்க மாளவிகா ஒப்பந்தமாகி உள்ளதாக  தகவல் கிடைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here