மாநிலத்தில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட 23 செயலிகளுக்கு திடீர் தடை, அரசு அதிரடி உத்தரவு!!

0
மாநிலத்தில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட 23 செயலிகளுக்கு திடீர் தடை, அரசு அதிரடி உத்தரவு!!
மாநிலத்தில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட 23 செயலிகளுக்கு திடீர் தடை, அரசு அதிரடி உத்தரவு!!

பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில், பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் போன்ற செயலிகள் இயங்க, தடை விதிப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

அரசு உத்தரவு:

உலகம் முழுவதும் சோசியல் மீடியா தளங்களுக்கென்று, மிகப்பெரிய டிமாண்ட் உள்ளது. இதன் பயன்பாடு இல்லாத, ஒரு நாளை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு, இதை மக்கள் மனதில் வேரூன்றி விட்டது. தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப், Google+, Baidu, Viber, Line, Pinterest, Telegram, Reddit, Snaptish, YouTube போன்ற 23 க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு தடை விதிப்பதாக, பீகார் அரசு அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில், பாதுகாப்பு காரணங்கள் கருதி இந்த சமூக வலைதளங்களுக்கு வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி இரவு 11 மணி வரை தடை விதிப்பதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வயது வரம்பு தளர்த்த வேண்டும்., பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!!

வன்முறை மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் காரணமாகவும், பொதுமக்கள் நலன் கருதியும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here