சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வயது வரம்பு தளர்த்த வேண்டும்., பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!!

0

அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வுகளை மத்திய மாநில தேர்வாணையம் அறிவித்து வருகிறது. மேலும் இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு படிப்பு, வயது வரம்பு என சில தகுதிகளும் கட்டாயப்படுத்தப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு அரசு வேலை பெற விரும்புபவர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

ஆனால் எதிர்பாராதவிதமாக கொரோனா அச்சுறுத்தலால் போட்டித்தேர்வுகள் நடத்தப்படவில்லை. இதையடுத்து தமிழ்நாட்டில் அரசு பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டது. ஆனால் மத்திய அரசு தெரிவித்த குடிமைப்பணி (Civil Service) தேர்வுக்கு எப்போதும் போல் வயது வரம்புகள் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களின் நலன் கருதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இதில் “கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு குடிமைப்பணி தேர்வுகளுக்கு வயது வரம்பு தகுதிகள் தளர்த்த வேண்டும். மேலும் இதுபோன்று தேர்வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏதும் ஏற்படாது” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here