Wednesday, May 22, 2024

பீகார் முதல்வராக நிதிஷ் குமார் – இன்று மாலை பதவி ஏற்பு!!

Must Read

ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் தொடர்ந்து நான்காவது முறையாக இன்று மாலை பீகார் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி, எம்.எல்.ஏ.கூட்டத்தில், அவர் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நிதிஷ் குமார்:

இவர் இந்தியாவின் அரசியலாளர் மற்றும் பீகார் மாநில முதலமைச்சர் ஆகவும் பணியாற்றினார். இந்தியாவின் இரும்பு துறை அமைச்சராகவும் இருந்தார். ஐக்கிய சனதா தளம் என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் இருந்தார். 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் இவர் பதவியை விட்டு விலகினார். இவருக்கு வயது 69 ஆன நிலையில், மீண்டும் இன்று மாலை பீகார் மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பீஹார் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், தே.ஜ. கூட்டணி, 125 இடங்களைப் பெற்றது. 122 இடங்கள் தேவை என்ற நிலையில், இந்தகூட்டணி வென்றது. கடந்த முறை, 71 இடங்களில் வென்ற, ஐக்கிய ஜனதா தளம், தற்போது, 43 இடங்களில் மட்டுமே வென்றது. கடந்த தேர்தலில், 53 இடங்களில் வென்ற பா.ஜ. 74 தொகுதிகளை வென்றது.

கவர்னருடன் சந்திப்புக்கு பின் நிதிஷ் குமார் கூறியது, கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களை, கவர்னரிடம் ஒப்படைத்தோம். ஆட்சி அமைக்கும்படி, அவர் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை, 4 மணி முதல் 4:30 மணிக்குள் பதவியேற்போம். அதன்பின் அமைச்சரவை கூட்டம் நடத்தி, சட்டசபை கூட்டத்தை எப்போது நடத்துவது என்பது முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 3

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 3 https://www.youtube.com/watch?v=rchL96FF00M  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -