பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் சம்பளம் இவ்வளவா?? வாயை பிளந்த ரசிகர்கள்!!!

0
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் பினாலே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடைசி வரை அர்ச்சனா, மாயா, தினேஷ், விஷ்ணு ஆகியோர் இருந்த நிலையில் யார் டைட்டிலை தட்டிச் செல்லப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் இதில் அர்ச்சனா ரசிகர்களிடம் அதிக வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் ஆனார். இப்படி இருக்கையில் தற்போது இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 28 வது நாளில் தான் அர்ச்சனா வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டுக்குள் நுழைந்தார். அதன்படி மொத்தம் வீட்டில் 77 நாட்கள் இருந்த அர்ச்சனாவுக்கு 15 லட்சத்து 40 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. மேலும் டைட்டில் வின்னர் பரிசுத் தொகையாக ரூபாய் 50 லட்சமும், ஒரு பிளாட் மற்றும் சொகுசு காரும் வழங்கப்பட்டுள்ளது. இது எல்லாம் சேர்த்து மொத்தமாக அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் ரூபாய் 95 லட்சத்தை சம்பாதித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here