பிக் பாஸ் சீசன் 5 எப்பொழுது தெரியுமா?? கமலஹாசனே வெளியிட்ட அறிவிப்பு!!

0
bigg boss

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்ற அப்டேட் ஒன்றை கமலஹாசன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி

காமெடி, சீரியல் என அனைத்திலும் நம்பர் 1 ஆக வலம் வரும் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ல் பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ ஒன்றை அறிமுகப்படுத்தியது. முதல் சீசனே செம ரீச். இதை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியது மேலும் அதிக அளவில் மக்களிடையில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. தற்போது 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்டது விஜய் தொலைக்காட்சி.

இந்த நேரத்தில் விஜய் தொலைக்காட்சி கொரோனா காரணமாக தான் பிக்பாஸ் 5வது சீசன் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளதாம், அதேசமயம் பிரபலங்களை தேர்வு செய்யும் பணி மட்டும் நடந்து வருகிறதாம். எப்போது நிகழ்ச்சி தொடங்கும் என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் 5வது சீசன் குறித்த அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது கொரோனா தொற்று குறையட்டும் பின்பு பார்க்கலாம் என குறிப்பிட்ட நபர்களிடம் கூறியுள்ளாராம். கொரோனா குறையாத இந்த சூழலில் பிக்பாஸ் தனது 5வது சீசன் பற்றிய அறிவிப்பு இருக்குமா? இருக்காதா? என்ற குழப்பம் ரசிகர்களிடையே உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here