ஆண் சட்டையில் எலும்பும் தோலுமாக போஸ் கொடுத்த ஓவியா – எப்படி இருந்தாலும் எங்க தல கெத்து தான்!!

0

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஓவியா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து பலரும் ஷாக்காகியுள்ளனர்.

ஓவியா

‘களவாணி’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ஓவியா. அதன் பிறகு சிவகார்திகேயனுடன் மெரினா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரமும் ரசிக்கும்படியாக தான் இருக்கும்.

அதன் பிறகு பல ஹிட் படங்களையும் கொடுத்து வந்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியா செய்த செய்கைகள் அனைத்துமே மக்கள் பேராதரவை பெற்றது. ஓவியா ஆர்மியே உருவானது. எங்கு சென்றாலும் ஓவியா தான்.

அதுவும் ஜூலிக்கு சப்போர்ட் செய்ய போய் ஓவியா பிரச்சனையில் சிக்கி கொண்டார். இதனால் மேலும் அவருக்கு ஆதரவு ஏற்பட்டது. ஆரவ் மற்றும் ஓவியாவிற்கு இடையே காதல் மலர பெரிய பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஓவியா வீட்டை விட்டே வெளியேறினார்.

எப்படியும் ஓவியா தான் இந்த இந்த சீசன் வெற்றியாளராக இருந்திருக்க வேண்டியது. ஆனால் அவர் வெளியேறியதால் ஆரவ் தான் வெற்றி பெற்றார். சில காலமாக ஓவியா திரையுலகில் தலையிடாமல் இருக்க தற்போது மீண்டும் உருவெடுத்துள்ளார்.

போட்டோஷூட் மூலம் மீண்டும் தலைதூக்கி உள்ளார். ஆனால் முன்பை போல இல்லாமல் உடல் இழைத்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போயுள்ளார். தற்போது ஷர்ட்டில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here