பாலாஜி பார்த்த வேலையால் தண்டனை பெறும் போட்டியாளர்கள் – கழுவி ஊற்றும் பிக் பாஸ் ரசிகர்கள்!!

0

தற்போது பிக் பாஸ் வீட்டில் தீபாவளியை முன்னிட்டு பல கலகலப்பான டாஸ்கை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அளித்தது. ஆரம்பத்தில் சந்தோசமாக போயிக் கொண்டிருந்தாலும் இந்த டாஸ்க்கிலும் சண்டைகளே ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பொழுது வெளியான ப்ரோமோவில் பிக் பாஸ் பாலாஜியை டாஸ்கை புரிந்து கொண்டு செய்யுமாறு வார்னிங் கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 4

பிக் பாஸ் சீசன் 4 தற்போது வெற்றிகரமாக 35 நாட்களுக்கு மேல் கடந்துள்ளது. மேலும் இந்த வாரம் தீபாவளி சிறப்பாக எலிமினேஷன் கிடையாது என பிக் பாஸ் உத்தரவிட்டுள்ளார். இது போட்டியாளர்களுக்கு மேலும் சந்தோசத்தை ஏற்படுத்தியது. சரி அடுத்து டாஸ்க் தான் என்ன சண்டைகள் வரப்போகுதோ? என்று இருந்த மக்களுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக கிராமத்து டாஸ்கை பிக் பாஸ் கொடுத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதாவது குடும்பத்தில் மூத்தவரான அர்ச்சனாவிடம் இருக்கும் சொத்துக்களை வாங்க வேண்டும். மேலும் பாட்டியை யார் நன்றாக கவனித்து கொள்கிறார்களோ அவர்களுக்கே சொத்துக்களை கொடுப்பதாக அர்ச்சனா கூறியிருந்தார். மேலும் சொத்து பத்திரத்தை திருட ரம்யா, கேபி மற்றும் சோம் போட்டியாளர்களுக்கு தெரியாமல் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் 2 நாட்களாக பாலாஜி டாஸ்க்கில் சொன்னபடி நடந்து கொள்ளாமல் அவர் இஷ்டத்துக்கே நடந்து கொண்டார். மேலும் பாட்டியை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே இதில் முக்கியமான ஒன்று. ஆனால் பாலாஜி நேற்று அர்ச்சனாவை எடுத்து எரிந்தே பேசினார். இந்நிலையில் தற்போது இந்த போட்டி முடிவடைந்த நிலையில் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதாவது இந்த பாலாஜி டாஸ்கில் சொன்னபடி நடக்காததால் பாயிண்ட்ஸ் பூஜ்ஜியமாக கொடுக்கப்பட்டது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பிக் பாஸ் பாலாஜியை டாஸ்கை புரிந்து கொண்டு செய்யுமாறு வார்னிங் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here